• May 02 2024

துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 1200 கொள்கலன்கள்..!தலையிட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே.! samugammedia

Sharmi / Jun 13th 2023, 3:05 pm
image

Advertisement

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இலங்கை துறைமுக முனையத்தில் சுமார் ஆயிரத்து 200 வெவ்வேறான கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் கலந்துரையாடலின் போது அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல், தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கலந்துரையாடல் கடந்த 8ஆம் திகதி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்றிருந்து.

இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கொள்கலன்களில் உணவு பொருட்களும் இருப்பதாக அறியப்படுகிறது.

சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வழக்கொன்றை முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை எனவும் இதனால் இவ்வாறு கொள்கலன்கள் தடுத்து வைப்பட்டுவதாகவும் இதற்கு உரிய தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் கூடிய விரைவில் முறையான ஒன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 60 வீதமானவை கிரீன் ஏரியாவில் இருந்து கொண்டு வரும்போது, சோதனை செய்யப்படுவதில்லை என்றும் இதனால், சட்டவிரோத சிகரெட் மற்றும் மதுபானம் மறைத்து கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 1200 கொள்கலன்கள்.தலையிட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே. samugammedia நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இலங்கை துறைமுக முனையத்தில் சுமார் ஆயிரத்து 200 வெவ்வேறான கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் கலந்துரையாடலின் போது அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல், தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கலந்துரையாடல் கடந்த 8ஆம் திகதி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்றிருந்து.இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கொள்கலன்களில் உணவு பொருட்களும் இருப்பதாக அறியப்படுகிறது.சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வழக்கொன்றை முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை எனவும் இதனால் இவ்வாறு கொள்கலன்கள் தடுத்து வைப்பட்டுவதாகவும் இதற்கு உரிய தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் கூடிய விரைவில் முறையான ஒன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 60 வீதமானவை கிரீன் ஏரியாவில் இருந்து கொண்டு வரும்போது, சோதனை செய்யப்படுவதில்லை என்றும் இதனால், சட்டவிரோத சிகரெட் மற்றும் மதுபானம் மறைத்து கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement