• May 17 2024

புத்தளத்தில் சிமெந்து ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து..!மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி..!samugammedia

Sharmi / Jun 13th 2023, 3:13 pm
image

Advertisement

புத்தளம் பாலாவி இன்ஸி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து கொழும்பு பெஹெலியகொட பகுதிக்கு கட்டட வேலைக்காக சிமெந்து ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி டெலிகொம் தொலைப்பேசி தொடர்பு கம்பத்தையும் உடைத்துக் கொண்டு தனியார் ஒருவரின் காணிக்குள் சென்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் சிமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான பாரஊர்தியே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிித்தனர்.

குறித்த விபத்து பாலாவி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்திற்கான காரணம் திசைமாற்றி இறுகியமையினால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டெலிகொம் தொலைபேசி தொடர்பு கம்பம் உடைந்தமையினால் தொலைப்பேசி தொடர்பு பாலாவி, கல்லடி, அட்டவில்லு ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.


புத்தளத்தில் சிமெந்து ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து.மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி.samugammedia புத்தளம் பாலாவி இன்ஸி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து கொழும்பு பெஹெலியகொட பகுதிக்கு கட்டட வேலைக்காக சிமெந்து ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி டெலிகொம் தொலைப்பேசி தொடர்பு கம்பத்தையும் உடைத்துக் கொண்டு தனியார் ஒருவரின் காணிக்குள் சென்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றின் சிமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான பாரஊர்தியே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிித்தனர்.குறித்த விபத்து பாலாவி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்திற்கான காரணம் திசைமாற்றி இறுகியமையினால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.டெலிகொம் தொலைபேசி தொடர்பு கம்பம் உடைந்தமையினால் தொலைப்பேசி தொடர்பு பாலாவி, கல்லடி, அட்டவில்லு ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement