• Nov 26 2024

சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 11:40 am
image

தென் அமெரிக்காவின் சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சிலியில் அமைந்துள்ள வியாடெல் மாா் பகுதியில் காட்டுத் தீ சனிக்கிழமை பரவத் தொடங்கியது.

தொலைதூர மலைக்காட்டுப் பகுதியில் இந்தத் தீ ஏற்பட்டதால், அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியே மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினா் திணறினா்.

அத்துடன்  இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 112 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை (6) நிலவரப்படி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக் அதிகரித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஒரே நேரத்தில் 4 திசைகளில் இருந்து தீ பரவத் தொடங்கியதால், இது வேண்டுமேன்ற ஏற்படுத்தப்பட் காட்டுத் தீயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாலும், காட்டுத் தீயில் காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும்  அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழப்பு.samugammedia தென் அமெரிக்காவின் சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 123 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சிலியில் அமைந்துள்ள வியாடெல் மாா் பகுதியில் காட்டுத் தீ சனிக்கிழமை பரவத் தொடங்கியது. தொலைதூர மலைக்காட்டுப் பகுதியில் இந்தத் தீ ஏற்பட்டதால், அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியே மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினா் திணறினா்.அத்துடன்  இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 112 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை (6) நிலவரப்படி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக் அதிகரித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் ஒரே நேரத்தில் 4 திசைகளில் இருந்து தீ பரவத் தொடங்கியதால், இது வேண்டுமேன்ற ஏற்படுத்தப்பட் காட்டுத் தீயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாலும், காட்டுத் தீயில் காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும்  அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

Advertisement