• May 19 2024

13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- மஹிந்த வேண்டுகோள்!

Sharmi / Jan 24th 2023, 7:37 pm
image

Advertisement

அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும், அதிலுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தனித்தனியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்ப வேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்தமை தொடர்பில் ஊடகங்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியாகவுள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் தனித்தனியே முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டுக் குழப்ப வேண்டாம்" - என்றார்.

13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- மஹிந்த வேண்டுகோள் அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும், அதிலுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தனித்தனியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்ப வேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.13ஆவது திருத்தச் சட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்தமை தொடர்பில் ஊடகங்கள் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியாகவுள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் தனித்தனியே முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டுக் குழப்ப வேண்டாம்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement