• May 17 2024

லசந்த விக்ரமதுங்கவின் 14ம் ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு

Chithra / Jan 8th 2023, 1:46 pm
image

Advertisement

சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமைய உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சிரேஸ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த போது இனந்தெரியாத குழுவினால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.  

குற்றவாளி சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார்.

இவரின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக இவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


லசந்த விக்ரமதுங்கவின் 14ம் ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமைய உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.சிரேஸ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்த போது இனந்தெரியாத குழுவினால் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.  குற்றவாளி சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார்.இவரின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக இவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement