வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலை காரணமாக நேற்றையதினம்(31) 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டிய ஒடிசா மாகாணத்தில் மட்டும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஏனைய மரணங்கள் புதுடெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலுடனான சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள ஒடிசா மாகாணத்தில் அதிக வெப்பநிலையைத் தாங்குவதில் சிரமம் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்நாட்களில் இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதுடன் ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவது பிரச்னையாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிலவும் கடும் வெப்பம்- இந்தியாவில் 15 பேர் பரிதாப மரணம். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலை காரணமாக நேற்றையதினம்(31) 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டிய ஒடிசா மாகாணத்தில் மட்டும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.ஏனைய மரணங்கள் புதுடெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலுடனான சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள ஒடிசா மாகாணத்தில் அதிக வெப்பநிலையைத் தாங்குவதில் சிரமம் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை இந்நாட்களில் இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதுடன் ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவது பிரச்னையாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.