• Sep 17 2024

அனுரவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 3rd 2024, 5:09 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். 

ஆனால் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும்.

ஏற்கனவே நாடு சீனாவின் கடன் பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள். 

அது மட்டும் அல்ல தேசிய மக்கள் கட்சியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்களின் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.

என்னைப் பொறுத்தவரையில்  அநுரவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

ஏனெனில் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள், 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில் பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜேவிபியினர்.

இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனுரவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு. தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். ஆனால் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன் பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள். அது மட்டும் அல்ல தேசிய மக்கள் கட்சியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்களின் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.என்னைப் பொறுத்தவரையில்  அநுரவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள், 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில் பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜேவிபியினர். இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement