• May 08 2024

திடீரென சுகவீனமடைந்த 15 மாணவர்கள்..! பாடசாலைக்கு பூட்டு samugammedia

Chithra / Sep 21st 2023, 8:57 am
image

Advertisement

குருநாகல் கனேவத்த ஹிரிபிட்டிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் அந்த பாடசாலை நேற்று (20) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரை 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் சுமார் 15 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.

பாடசாலையில் கல்விகற்கும் போது பல மாணவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு கனேவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கனேவத்தை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் பாடசாலையின் அனைத்து வகுப்பறைகளையும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சுமார் 03 நாட்களுக்கு ஒரு பாடசாலையை மூடவேண்டிய நிலை ஏற்படும்.

எவ்வாறாயிலும் பாடசாலை தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் திறக்க உத்தேசித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

திடீரென சுகவீனமடைந்த 15 மாணவர்கள். பாடசாலைக்கு பூட்டு samugammedia குருநாகல் கனேவத்த ஹிரிபிட்டிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் அந்த பாடசாலை நேற்று (20) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரை 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் சுமார் 15 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.பாடசாலையில் கல்விகற்கும் போது பல மாணவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு கனேவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கனேவத்தை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் பாடசாலையின் அனைத்து வகுப்பறைகளையும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சுமார் 03 நாட்களுக்கு ஒரு பாடசாலையை மூடவேண்டிய நிலை ஏற்படும்.எவ்வாறாயிலும் பாடசாலை தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் திறக்க உத்தேசித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement