• May 19 2024

15 ஆண்டுகள் தண்டனை - சிறையில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த கைதி..! samugammedia

Chithra / May 18th 2023, 10:29 am
image

Advertisement

மொனராகலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்ட நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கடந்த (15 ஆம் திகதி) உயிரிழந்துள்ளதாக மொனராகலை வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை சிறிபுர அத்மல்கந்தவுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

மொனராகலை சிறைச்சாலையின் E4 வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் துணியின் உதவியுடன் தூக்கிட்டுள்ளார்

சம்பவத்தை கண்ட சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்த கைதி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மொனராகலை மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி ஏ.எல்.சஜினி அமரவிக்ரமவினால் மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை பதுளை பொது வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.


15 ஆண்டுகள் தண்டனை - சிறையில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த கைதி. samugammedia மொனராகலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்ட நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கடந்த (15 ஆம் திகதி) உயிரிழந்துள்ளதாக மொனராகலை வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அம்பாறை சிறிபுர அத்மல்கந்தவுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மொனராகலை சிறைச்சாலையின் E4 வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் துணியின் உதவியுடன் தூக்கிட்டுள்ளார்சம்பவத்தை கண்ட சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த கைதி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மொனராகலை மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி ஏ.எல்.சஜினி அமரவிக்ரமவினால் மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை பதுளை பொது வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement