• Nov 28 2024

இலங்கையில் யுத்தம் நிறைவுற்று 15 ஆண்டுகள்...! படையினரின் அத்துமீறல்கள் தொடர்கிறது...!சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு...!

Sharmi / May 9th 2024, 4:03 pm
image

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்திச் சென்று காணாமல் ஆக்குவதும், அவர்களை பாரதூரமான உடல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழர்களின் காணாமல் போதல்கள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள், 2015-2022' என்னும் இவ்வறிக்கையில், இந்த ஏழாண்டு காலப்பகுதியில், 139 தடவைகள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு, தடுத்துவைத்திருக்கப்பட்ட, 20-39 வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட, 109 ஆண்களும் 14 பெண்களுமாக, 123 தமிழர்களது வாக்குமூலங்கள் ஆராயப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள் அனைவரும் இப்போது சிறிலங்காவிற்கு வெளியே வசிக்கின்றார்கள்.

2009இல் போர் முடிந்த பின்னர், தமிழர்கள் கடத்தப்பட்டு சி;த்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் ITJP முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை, சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல், காணாமல் போகச்செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்த உடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும் தொடர்வதைக் காட்டுகின்றது.

'மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றது.

இது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழ வேரூன்றிப் போயுள்ளது. 

சிறிலங்காவில், பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாக இத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் பாதுகாப்புதுறை சீரமைக்கப்படுவதற்கும், தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்க்குப் பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமே இதனை நிறுத்திக்கொள்ள முடியும்.

இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களை வழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே' இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்துவைப்புக்களில், அவரைவாசி- 24பேரில் 11 பேர் - சம்பவங்கள் யூலை 2022இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரேயே நிகழ்ந்தன.

இந்த 139 சம்பவங்களில், 65 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து அல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து, உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்ட அமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில்,அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இவ்வனைத்துச் சம்பவங்களிலும், தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும், கைகள் பின்னால் கட்டப்பட்டும், பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.  ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கே கொண்டு செல்லப்பட்டதுடன், குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை.

இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில், 139 தடுப்புக்காவல் சம்பவங்களில் 130 இல், விசாரணைகளின்போது, குறைந்தபட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்பட சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

85 சம்பவங்களில், பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட் அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்தி மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 

32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

2022 மார்ச்சில், 28 வயது ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து, சாதாரண உடைகளில் வந்த நபர்களால், பிடித்துச்செல்லப்பட்டு, 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 'அந்த நேரத்தில்தான் பெற்றோலில் நனைக்கப்பட்ட பொலித்தீன் பையால் என்னுடைய தலை மூடப்பட்டது. நான்கு அல்லது ஐந்து தடவைகள் இவ்வாறு அவர்கள் என்மீது போட்டார்கள். பின்னர், தண்ணீர் நிரப்பப்ட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலனுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னுடைய முகத்தினை நீரினுள் அழுத்திப்பிடிக்கும்போது, அது அரைமணித்தியாலங்கள் நீடித்ததுபோன்று எனக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் முகம் வெளியில் எடுக்கப்பட்டு, மூச்சு இழுத்துவிடும்போது, உண்மையைச் சொல்லும்படியும், பெயர்களைச் சொல்லும்படியும் எனக்குச்சொல்லப்பட்டது. நான் மிகவும் களைப்படைந்து, தரையில் சரிந்து விழுந்தேன். அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு மீண்டும் நான் இழுத்துச்செல்லப்பட்டேன்' இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் ரீதியான சித்திரவதையும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட, 91 தடுத்துவைப்பு நிகழ்வுகளில், அனைவருமே பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 82 பேர், பின்வரும் ஐந்து வகையான பாலியல் சித்திரவதைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றுக்காவது ஆளாக்கப்பட்டனர்.

விதைப்பைகளை கசக்குதல், வாய்மூலமாக வன்புணர்வு, ஆண்குறி மூலமான பலாத்காரம், கம்பிகளை மலவாசல்வழியே செலுத்துதல், சுயஇன்பத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் என்பன. 51 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். 11 பேர் மீது கம்பிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

40 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஆண்கள் மீதும் 11 சம்பவங்களில் பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.

கடத்தல்கள், தடுத்து வைப்புக்கள், சித்திரவதை மற்றும் பாலியல் சித்திரவதைகள் என்பவற்றின் எண்ணிக்கை இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட, பரந்துபட்ட பாரதூரமான குற்றச்செயல்களாக நடைபெறுகின்றன என்பதை விளக்குகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், வோல்கெர் ரூர்க், 2024 மார்ச் 1 ம் திகதி இடம்பெற்ற, மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றியபோது தனது கவலையினை வெளிப்படுத்தி பின்வருமாறு கூறினார்:

'கடத்தல்கள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகள் சிறிலங்கா காவல்துறையாலும் பாதுகாப்புப் படைகளாலும் திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த நம்பகரமான தகவல்களால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

இக்குற்றச்செயல்களில் சில 2023 இல் இடம்பெற்றதாகவும், குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.'

சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 ஆண்டிற்கான மனித உரிமைகள் அறிக்கையில் அறிக்கையில் 'வடக்கினைச் சேர்ந்த சில தமிழர்கள் காவல்துறை தம்மைச் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும், விடுதலைப் புலிகளுடன் அவர்களுக்கிருந்த தொடர்பு அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமை தொடர்பாக அவர்களிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக சில குடியியல் சமூக அமைப்புக்கள்தெரிவித்தன.' எனக் கூறப்பட்டிருந்தது

இலங்கையில் யுத்தம் நிறைவுற்று 15 ஆண்டுகள். படையினரின் அத்துமீறல்கள் தொடர்கிறது.சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்திச் சென்று காணாமல் ஆக்குவதும், அவர்களை பாரதூரமான உடல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,'தமிழர்களின் காணாமல் போதல்கள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள், 2015-2022' என்னும் இவ்வறிக்கையில், இந்த ஏழாண்டு காலப்பகுதியில், 139 தடவைகள் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் சட்டவிரோதமாகப் பிடித்துச்செல்லப்பட்டு, தடுத்துவைத்திருக்கப்பட்ட, 20-39 வயதிற்குட்பட்டவர்களைப் பெரும்பான்மையானவர்களாகக் கொண்ட, 109 ஆண்களும் 14 பெண்களுமாக, 123 தமிழர்களது வாக்குமூலங்கள் ஆராயப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இத்தமிழர்கள் அனைவரும் இப்போது சிறிலங்காவிற்கு வெளியே வசிக்கின்றார்கள்.2009இல் போர் முடிந்த பின்னர், தமிழர்கள் கடத்தப்பட்டு சி;த்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் ITJP முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிவரும் இப்புதிய அறிக்கை, சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் எதிரான கடத்தல், காணாமல் போகச்செய்தல் மற்றும் சித்திரவதைகளில் பாதுகாப்புப் படைகளால் போர் முடிவடைந்த உடனடி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதே முறைமைகளும் நடைமுறைகளுமே இற்றைவரையும் தொடர்வதைக் காட்டுகின்றது.'மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எவ்விதமான பின்விளைவுகளையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றுதான் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்பது வரையறை செய்யப்படுகின்றது.இது காலப்போக்கில் அரசியல் அமைப்புக்களிலுள்ளும் அரசியல் கலாச்சாரத்தினுள்ளும் ஆழ வேரூன்றிப் போயுள்ளது. சிறிலங்காவில், பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான சர்வதேக் குற்றங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலுமில்லாமல் பல தசாப்தங்களாக இத்தண்டனை விலக்களிப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்புதுறை சீரமைக்கப்படுவதற்கும், தமிழர்களுக்கு எதிராக இவ்வன்முறைக் கலாச்சாரத்திற்க்குப் பொறுப்பானவர்களை நீக்குவதற்கும் சர்வதேச சமூகம் பாரிய அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமே இதனை நிறுத்திக்கொள்ள முடியும். இவ்வறிக்கையில் ஆய்வுசெய்யப்பட்ட வாக்குமூலங்களை வழங்கியவர்கள் பிரித்தானியாவிலோ அல்லது இதர இடங்களிலோ புகலிடம் கோரும் தமிழர்களின் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே' இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.இவ்வறிக்கையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2022இல் இடம்பெற்ற தடுத்துவைப்புக்களில், அவரைவாசி- 24பேரில் 11 பேர் - சம்பவங்கள் யூலை 2022இல் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரேயே நிகழ்ந்தன.இந்த 139 சம்பவங்களில், 65 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து அல்லது உறவினர்களின் வீடுகளிலிருந்து, உறவினர்கள் முன்னிலையில் சிறிலங்காவின் சட்ட அமுலாக்கள் அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இதர சம்பவங்களில் பெரும்பாலானவற்றில்,அவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்றுகொண்டிருக்கையில் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.இவ்வனைத்துச் சம்பவங்களிலும், தடுத்து வைக்கப்பட்டவர்களது கண்கள் கட்டப்பட்டும், கைகள் பின்னால் கட்டப்பட்டும், பெரும்பாலும் வெள்ளைநிற வான்களிலேயே பிடித்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.  ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்றைய அனைத்திலும் அவர்கள் அடையாளம் தெரியாத இடங்களுக்கே கொண்டு செல்லப்பட்டதுடன், குடும்பங்களுக்கும் அவர்கள் எங்கே கொண்டுசெல்லப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை.இரகசியத் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கையில், 139 தடுப்புக்காவல் சம்பவங்களில் 130 இல், விசாரணைகளின்போது, குறைந்தபட்சம் கடுமையாகத் தாக்கப்பட்டது உட்பட சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.85 சம்பவங்களில், பிளாஸ்ரிக் பைகளால் மூச்சுத்திணறல் செய்யப்பட்டது. 47 சம்பவங்களில் சிகரட் அல்லது சூடான பொருட்களால் அவர்களுக்கு சூடுவைக்கப்பட்டது. 46 பேர் நீரில் முகத்தை அழுத்தி மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 32 சம்வங்களில் அவர்கள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டனர். 85 சம்பவங்களில் அவர்கள் பலமுறையான வடிவங்களில் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.2022 மார்ச்சில், 28 வயது ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து, சாதாரண உடைகளில் வந்த நபர்களால், பிடித்துச்செல்லப்பட்டு, 10 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 'அந்த நேரத்தில்தான் பெற்றோலில் நனைக்கப்பட்ட பொலித்தீன் பையால் என்னுடைய தலை மூடப்பட்டது. நான்கு அல்லது ஐந்து தடவைகள் இவ்வாறு அவர்கள் என்மீது போட்டார்கள். பின்னர், தண்ணீர் நிரப்பப்ட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலனுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னுடைய முகத்தினை நீரினுள் அழுத்திப்பிடிக்கும்போது, அது அரைமணித்தியாலங்கள் நீடித்ததுபோன்று எனக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் முகம் வெளியில் எடுக்கப்பட்டு, மூச்சு இழுத்துவிடும்போது, உண்மையைச் சொல்லும்படியும், பெயர்களைச் சொல்லும்படியும் எனக்குச்சொல்லப்பட்டது. நான் மிகவும் களைப்படைந்து, தரையில் சரிந்து விழுந்தேன். அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு மீண்டும் நான் இழுத்துச்செல்லப்பட்டேன்' இவ்வாறு அவர் கூறினார்.பாலியல் ரீதியான சித்திரவதையும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட, 91 தடுத்துவைப்பு நிகழ்வுகளில், அனைவருமே பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். 82 பேர், பின்வரும் ஐந்து வகையான பாலியல் சித்திரவதைகளில் குறைந்தது ஏதேனும் ஒன்றுக்காவது ஆளாக்கப்பட்டனர்.விதைப்பைகளை கசக்குதல், வாய்மூலமாக வன்புணர்வு, ஆண்குறி மூலமான பலாத்காரம், கம்பிகளை மலவாசல்வழியே செலுத்துதல், சுயஇன்பத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் என்பன. 51 பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். 11 பேர் மீது கம்பிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. 40 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஆண்கள் மீதும் 11 சம்பவங்களில் பெண்கள் மீதும் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டது.கடத்தல்கள், தடுத்து வைப்புக்கள், சித்திரவதை மற்றும் பாலியல் சித்திரவதைகள் என்பவற்றின் எண்ணிக்கை இவை எவ்வாறு முறைப்படுத்தப்பட்ட, பரந்துபட்ட பாரதூரமான குற்றச்செயல்களாக நடைபெறுகின்றன என்பதை விளக்குகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், வோல்கெர் ரூர்க், 2024 மார்ச் 1 ம் திகதி இடம்பெற்ற, மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றியபோது தனது கவலையினை வெளிப்படுத்தி பின்வருமாறு கூறினார்: 'கடத்தல்கள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகள் சிறிலங்கா காவல்துறையாலும் பாதுகாப்புப் படைகளாலும் திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த நம்பகரமான தகவல்களால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.இக்குற்றச்செயல்களில் சில 2023 இல் இடம்பெற்றதாகவும், குறிப்பாக நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.'சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2023 ஆண்டிற்கான மனித உரிமைகள் அறிக்கையில் அறிக்கையில் 'வடக்கினைச் சேர்ந்த சில தமிழர்கள் காவல்துறை தம்மைச் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்து சித்திரவதை செய்ததாகவும், விடுதலைப் புலிகளுடன் அவர்களுக்கிருந்த தொடர்பு அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தமை தொடர்பாக அவர்களிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக சில குடியியல் சமூக அமைப்புக்கள்தெரிவித்தன.' எனக் கூறப்பட்டிருந்தது

Advertisement

Advertisement

Advertisement