• Feb 20 2025

இலங்கையில் 16 இலட்சம் அங்கவீனர்கள் அடையாளம்

Chithra / Feb 16th 2025, 1:15 pm
image

 

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இன்று   இடம்பெற்றது.   

மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது  பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. 

மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் அங்கு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோர் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் 16 இலட்சம் அங்கவீனர்கள் அடையாளம்  நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க தெரிவித்தார்.கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இன்று   இடம்பெற்றது.   மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது  பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் அங்கு தெரிவித்தார்.மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோர் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement