• Sep 21 2024

நுவரெலியாவில் குதிரை சவாரி செய்த 16 வயது சிறுமி தவறி விழுந்து காயம்!

Tamil nila / Aug 9th 2024, 10:06 pm
image

Advertisement

நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் இன்று  பிற்பகல் மட்டக்குதிரை சவாரி செய்து கொண்டிருந்த இத்தாலிய பிரஜையான 16 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

அதாவது இம் மாதம்  திகதி 16 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில் இன்று (09) நுவரெலியா நாகரசபை மைதானத்திற்கு அருகில் மட்டக்குதிரை சவாரியில் ஈடுபடும் போது 16 வயதுடைய யுவதி சவாரி செய்த மட்டகுதிரை திடீரென முரட்டுத்தனமாக வேகமாக சென்றதில் தவறி விழுந்து விலா எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக நுவரெலியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் மட்டக்குதிரை சவாரி செய்யும் போது பாதுகாப்பு  தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு  காரணமாக அமைகிறது என்றும் இதுபோன்று மட்டக்குதிரையில் இருந்து தவறி விழுவது இது முதல்முறையல்ல என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்வரும் காலங்களில்  முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் குதிரை சவாரி செய்த 16 வயது சிறுமி தவறி விழுந்து காயம் நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் இன்று  பிற்பகல் மட்டக்குதிரை சவாரி செய்து கொண்டிருந்த இத்தாலிய பிரஜையான 16 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.அதாவது இம் மாதம்  திகதி 16 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில் இன்று (09) நுவரெலியா நாகரசபை மைதானத்திற்கு அருகில் மட்டக்குதிரை சவாரியில் ஈடுபடும் போது 16 வயதுடைய யுவதி சவாரி செய்த மட்டகுதிரை திடீரென முரட்டுத்தனமாக வேகமாக சென்றதில் தவறி விழுந்து விலா எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறிப்பாக நுவரெலியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் மட்டக்குதிரை சவாரி செய்யும் போது பாதுகாப்பு  தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு  காரணமாக அமைகிறது என்றும் இதுபோன்று மட்டக்குதிரையில் இருந்து தவறி விழுவது இது முதல்முறையல்ல என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்வரும் காலங்களில்  முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement