16 வயதுடைய சிறுமி மாயம் - தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள் மத்திய மாகாணத்தின் கந்தேநுவர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 16 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த சிறுமி 2024 டிசம்பர் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.காணாமல் போன சிறுமி சுமார் 05 அடி உயரம் மற்றும் நீண்ட முடி மற்றும் மெல்லிய உடல் அமைப்பை கொண்டவர்.காணாமல் போன சிறுமியின் பெயர் லமங்கெதர தருஷி சம்பிகா என்பதாகும்.அவர் இலக்கம் 85, கந்தேநுவர, அல்வத்தை என்ற முகவரியில் வசிப்பவர்.காணாமல் போன சிறுமி பற்றி மேலும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கந்தேநுவர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 – 8592943கந்தேநுவர பொலிஸ் நிலையம் :- 066-3060954