• May 19 2024

நாட்டை விட்டு ஓடிய 167 மயக்க மருந்து நிபுணர்கள்..! சுகாதார அமைச்சு தகவல் samugammedia

Chithra / Jul 3rd 2023, 12:26 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 167 பேர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரியச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 323 விசேட வைத்தியர்களுள் 160 பேர் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள்) டொக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.

இவர்களுள் சில மருத்துவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் முறையான சட்ட அமைப்பு இந்த நாட்டில் இல்லாதது பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டியுள்ள சுகாதார திணைக்கள அதிகாரிகள், அவ்வாறான சட்ட முறைமை விரைவில் தயாரிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க விசா இரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் நெறிமுறைகளை மீறியதாக கூறி மருத்துவ கவுன்சில் பதிவுகளை கூட இரத்து செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அப்படி ஒரு திட்டம் சரியாக செயல்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.


நாட்டை விட்டு ஓடிய 167 மயக்க மருந்து நிபுணர்கள். சுகாதார அமைச்சு தகவல் samugammedia இலங்கையில் உள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 167 பேர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரியச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 323 விசேட வைத்தியர்களுள் 160 பேர் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள்) டொக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.இவர்களுள் சில மருத்துவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் முறையான சட்ட அமைப்பு இந்த நாட்டில் இல்லாதது பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டியுள்ள சுகாதார திணைக்கள அதிகாரிகள், அவ்வாறான சட்ட முறைமை விரைவில் தயாரிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க விசா இரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் நெறிமுறைகளை மீறியதாக கூறி மருத்துவ கவுன்சில் பதிவுகளை கூட இரத்து செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அப்படி ஒரு திட்டம் சரியாக செயல்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement