• May 17 2024

கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதியற்ற நிலையில் வாழ்ந்துவரும் 16700 குடும்பங்கள்..! கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவிப்பு..!samugammedia

Sharmi / Jun 2nd 2023, 10:45 am
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில் இன்னும் 16700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனராக செந்தில் தொண்டமான் பதவியேற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆளுனரின் வருகையின் முதல் சந்திப்பாக இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுனர் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட ஆளுனர் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்கவிரும்புவதாக தெரிவித்தார்.

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டுவரும்போது உடனடி தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர்.

ஜனாதிபதி பெரியபொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ளார்.இந்த இக்கட்டான நிலையில் கிழக்கு மாகாணத்தினை முழுமையாக அபிவிருத்திசெய்யவேண்டும்.ஜனாதிபதியின் நம்பிக்கையினை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

இலங்கையானது சுமார் 50பில்லியனுக்கு மேற்பட்ட கடனில் உள்ளது.இது இவ்வாறே சென்றால் எமது பேரப்பிள்ளைகள் இதனைவிட அதிகமான கடனைப்பெற்றிருக்கும் நிலையேற்படும்.இந்த கடனை செலுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மாகாணத்திற்கும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை,விவசாயம்,மீன்பிடி உட்பட பல வளங்கள் உள்ளது.ஒரே வருடத்தில் 10பில்லியன் டோலரை பெற்றுக்கொள்ளமுடியும்.ஆனால் நாங்கள் வெளிநாடுகளில் கையேந்திக்கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதியற்ற நிலையில் வாழ்ந்துவரும் 16700 குடும்பங்கள். கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவிப்பு.samugammedia கிழக்கு மாகாணத்தில் இன்னும் 16700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது.கிழக்கு மாகாண ஆளுனராக செந்தில் தொண்டமான் பதவியேற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆளுனரின் வருகையின் முதல் சந்திப்பாக இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதன்போது ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுனர் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடினார்.அத்துடன் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட ஆளுனர் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் இணைந்து பயணிக்கவிரும்புவதாக தெரிவித்தார்.மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டுவரும்போது உடனடி தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர்.ஜனாதிபதி பெரியபொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ளார்.இந்த இக்கட்டான நிலையில் கிழக்கு மாகாணத்தினை முழுமையாக அபிவிருத்திசெய்யவேண்டும்.ஜனாதிபதியின் நம்பிக்கையினை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.இலங்கையானது சுமார் 50பில்லியனுக்கு மேற்பட்ட கடனில் உள்ளது.இது இவ்வாறே சென்றால் எமது பேரப்பிள்ளைகள் இதனைவிட அதிகமான கடனைப்பெற்றிருக்கும் நிலையேற்படும்.இந்த கடனை செலுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மாகாணத்திற்கும் இருக்கின்றது.கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை,விவசாயம்,மீன்பிடி உட்பட பல வளங்கள் உள்ளது.ஒரே வருடத்தில் 10பில்லியன் டோலரை பெற்றுக்கொள்ளமுடியும்.ஆனால் நாங்கள் வெளிநாடுகளில் கையேந்திக்கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement