• Oct 12 2024

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள் விடுதலை..!

Sharmi / Oct 11th 2024, 9:59 am
image

Advertisement

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் நேற்றையதினம்(10) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 17 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்களையும், படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம்(10)  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  சிறை தண்டனை விதித்துள்ளதுடன் நபருக்கு 50 ஆயிரம்  ரூபா தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவு வழங்குமாறு நீதவான் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த நிலையில் விடுதலையான 17 இந்திய மீனவர்களையும் மிகிரியான தடுப்பு முகாம் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மன்று உத்தரவிட்டுள்ளது.



தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள் விடுதலை. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் நேற்றையதினம்(10) உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 17 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.பின்னர் குறித்த மீனவர்களையும், படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம்(10)  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  சிறை தண்டனை விதித்துள்ளதுடன் நபருக்கு 50 ஆயிரம்  ரூபா தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக இலங்கை இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவு வழங்குமாறு நீதவான் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இந்த நிலையில் விடுதலையான 17 இந்திய மீனவர்களையும் மிகிரியான தடுப்பு முகாம் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement