• Nov 06 2024

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Tamil nila / Sep 29th 2024, 8:35 pm
image

Advertisement

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை உத்தரவிட்டார்.


இன்று ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளை யும் அதிலிருந்து 17 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதன்போது யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.



கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 17 இந்திய மீனவர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.



இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை உத்தரவிட்டார்.இன்று ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளை யும் அதிலிருந்து 17 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதன்போது யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 17 இந்திய மீனவர்களையும் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement