பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று வெள்ளிக்கிழமை (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
பெறுமதி சேர் வரி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு நேற்று வியாழக்கிழமை (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில், சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து, வாக்கெடுப்பு இன்றி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டில் 4ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.
பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று வெள்ளிக்கிழமை (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.பெறுமதி சேர் வரி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு நேற்று வியாழக்கிழமை (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில், சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து, வாக்கெடுப்பு இன்றி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டில் 4ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.