முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக, சட்ட வழிமுறைகள் மூலமாகவும், தேவைப்பட்டால், சர்வதேச உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நேற்றையதினம்(10) பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதற்கும், இந்தக் கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், அது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, சட்டத்திற்குள் சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன் நடவடிக்கை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட, பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக, சட்ட வழிமுறைகள் மூலமாகவும், தேவைப்பட்டால், சர்வதேச உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நேற்றையதினம்(10) பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதற்கும், இந்தக் கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், அது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, சட்டத்திற்குள் சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.