• Apr 13 2025

வவுனியாவில் பொலிசாருக்கு பயந்து தாறுமாறாக ஓடிய வாகனம் விபத்து - சாரதி தப்பியோட்டம்!

Thansita / Apr 10th 2025, 11:24 pm
image

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக முதிரைக் குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதுடன் சாரதி தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்...

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஒருதொகை முதிரைக்குற்றிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

இன்றையதினம் அதிகாலை வவுனியா வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பூவரசங்குளம் பொலிசார் வாகனம் ஒன்றை வழிமறித்துள்ளனர்.

இதன்போது குறித்த வாகனம் பொலிசாரின் சைகையை மீறி நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து பொலிசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர். அதிவேகமாக சென்ற வாகனம் இராசேந்திரங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பின்னர் சாரதி உட்பட இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அதிலிருந்த ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகளை  மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

மேலும்  தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் பொலிசாருக்கு பயந்து தாறுமாறாக ஓடிய வாகனம் விபத்து - சாரதி தப்பியோட்டம் வவுனியா பூவரசங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக முதிரைக் குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதுடன் சாரதி தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.வவுனியா பூவரசங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஒருதொகை முதிரைக்குற்றிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்றையதினம் அதிகாலை வவுனியா வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பூவரசங்குளம் பொலிசார் வாகனம் ஒன்றை வழிமறித்துள்ளனர்.இதன்போது குறித்த வாகனம் பொலிசாரின் சைகையை மீறி நிறுத்தாமல் சென்றுள்ளது.இதனையடுத்து பொலிசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர். அதிவேகமாக சென்ற வாகனம் இராசேந்திரங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.பின்னர் சாரதி உட்பட இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அதிலிருந்த ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகளை  மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்மேலும்  தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement