• Nov 26 2024

ரஷ்யா - உக்ரைன் போரில் 17 இலங்கையர்கள் உயிரிழப்பு..? வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Jun 28th 2024, 1:40 pm
image

 

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன.

இந்நிலையில், குறித்த இரு நாடுகளும் வெளிநாடுகளிலிருந்து தமது நாட்டு இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு என பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ரஷ்யா தனது இராணுவத்தில் ஆட்களை இணைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா - உக்ரைன் போரில் 17 இலங்கையர்கள் உயிரிழப்பு. வெளியான அதிர்ச்சித் தகவல்  ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன.இந்நிலையில், குறித்த இரு நாடுகளும் வெளிநாடுகளிலிருந்து தமது நாட்டு இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு என பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, ரஷ்யா தனது இராணுவத்தில் ஆட்களை இணைத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement