• Jun 18 2024

17 வயது மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 23 வயது காதலன்! இலங்கையில் கொடூரம் SamugamMedia

Chithra / Mar 22nd 2023, 9:56 am
image

Advertisement

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியுடன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயது இளைஞன், கொழும்பு மத்தியப் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகரின் மகள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மகள் சுமார் 6 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை என அவர் பொலிசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.


17 வயது மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 23 வயது காதலன் இலங்கையில் கொடூரம் SamugamMedia கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியுடன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயது இளைஞன், கொழும்பு மத்தியப் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகரின் மகள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர் என தெரிவிக்கப்படுகிறது.பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.மகள் சுமார் 6 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை என அவர் பொலிசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement