இந்தியாவின், ஆந்திர மாநிலம், பீமலி என்ற இடத்தில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது வாலிபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரான பார்கவ், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் குறித்த நாய் பார்கவை கடித்துள்ளது. நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பரவி பார்கவ் உயிரிழந்துள்ளார்.
மகன் இறந்ததிலிருந்து அவரது தந்தை நரசிங்கராவும் படுத்த படுக்கையாகி விட்டார்.
மகனை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நரசிங்கராவ் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியால் ஒரு வீட்டில் இரு உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளமை அந்தப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது செல்லப்பிராணியால் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
செல்லப்பிராணிகள் வளர்க்கும்போது, அதன் உடல் மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானித்துக்கொள்ள வேண்டும்.
இது போன்ற அநியாய உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ப்பு நாய் கடித்து 23 வயது வாலிபர் உயிரிழப்பு - சோகம் தாங்காமல் தந்தை மரணம் இந்தியாவின், ஆந்திர மாநிலம், பீமலி என்ற இடத்தில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது வாலிபர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞரான பார்கவ், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.மேலும் கடந்த மாதம் குறித்த நாய் பார்கவை கடித்துள்ளது. நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பரவி பார்கவ் உயிரிழந்துள்ளார்.மகன் இறந்ததிலிருந்து அவரது தந்தை நரசிங்கராவும் படுத்த படுக்கையாகி விட்டார்.மகனை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நரசிங்கராவ் நேற்று உயிரிழந்துள்ளார்.ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியால் ஒரு வீட்டில் இரு உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளமை அந்தப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது செல்லப்பிராணியால் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.செல்லப்பிராணிகள் வளர்க்கும்போது, அதன் உடல் மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானித்துக்கொள்ள வேண்டும்.இது போன்ற அநியாய உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.