• Sep 22 2024

இலங்கையில் 24 மணித்தியாலமும் இயங்கவுள்ள தபால் நிலையங்கள்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 10:52 am
image

Advertisement

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்தும் நடைமுறையை பொதுமக்களின் வசதிக்காக எளிமையாக்கும் வகையில் இலங்கையின் காவல்துறை மற்றும் தபால் திணைக்களங்கள் இணைந்து செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. 

அந்தவகையில் பொதுமக்கள் இரவு நேரத்திலும் போக்குவரத்து அபராதத்தை செலுத்தும் வகையில் மேல் மாகாணத்தில் 13 தபால் அலுவலகங்கள் 24/7 இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொம்பைத்தீவு, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, சீதாவகபுர ஆகிய இடங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் இரவு பகலாக இயங்கும். 

அந்தந்த தபால் நிலையங்கள் வேலை நேரத்திற்கு வெளியே அபராதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 24 மணித்தியாலமும் இயங்கவுள்ள தபால் நிலையங்கள். வெளியான அறிவிப்பு.samugammedia போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்தும் நடைமுறையை பொதுமக்களின் வசதிக்காக எளிமையாக்கும் வகையில் இலங்கையின் காவல்துறை மற்றும் தபால் திணைக்களங்கள் இணைந்து செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் பொதுமக்கள் இரவு நேரத்திலும் போக்குவரத்து அபராதத்தை செலுத்தும் வகையில் மேல் மாகாணத்தில் 13 தபால் அலுவலகங்கள் 24/7 இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, கொம்பைத்தீவு, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, சீதாவகபுர ஆகிய இடங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் இரவு பகலாக இயங்கும். அந்தந்த தபால் நிலையங்கள் வேலை நேரத்திற்கு வெளியே அபராதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement