• Jun 17 2024

25 வயது இளைஞன் மீது கோர தாக்குதல் - கால்களை துண்டாக்கிய கும்பல்..! samugammedia

Chithra / May 13th 2023, 9:31 am
image

Advertisement

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல, கஹாஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனின் கைகள் மற்றும் கால்கள் உடலில் இருந்து பிரிந்துள்ளது.

காயமடைந்தவர் ஹன்வெல்ல, கஹாஹேன, அஜித் பெரேரா மாவத்தையில் வசிக்கும் 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் தப்பியோட முற்பட்ட வேளையில் கால்களில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, அவரது வலது கால் உடலில் இருந்து பிரிந்ததுடன், கைகளும் பிரிந்து தொங்கியுள்ளது.

காயமடைந்த நபரின் வீட்டிற்கு அடுத்த வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் ஆரம்பமானதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு தெரியவந்ததாகவும், உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனுடன் உடலில் இருந்து பிரிந்திருந்த காலின் பகுதியும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

25 வயது இளைஞன் மீது கோர தாக்குதல் - கால்களை துண்டாக்கிய கும்பல். samugammedia கொழும்பின் புறநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஹங்வெல்ல, கஹாஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனின் கைகள் மற்றும் கால்கள் உடலில் இருந்து பிரிந்துள்ளது.காயமடைந்தவர் ஹன்வெல்ல, கஹாஹேன, அஜித் பெரேரா மாவத்தையில் வசிக்கும் 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.அத்துடன் தப்பியோட முற்பட்ட வேளையில் கால்களில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, அவரது வலது கால் உடலில் இருந்து பிரிந்ததுடன், கைகளும் பிரிந்து தொங்கியுள்ளது.காயமடைந்த நபரின் வீட்டிற்கு அடுத்த வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதல் ஆரம்பமானதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு தெரியவந்ததாகவும், உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதனுடன் உடலில் இருந்து பிரிந்திருந்த காலின் பகுதியும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement