கம்பஹா - பியகம பகுதியில் உள்ள ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்துக்கு முகநூல் மூலம் ஒன்றுகூடிய இளைஞர்கள் குழு ஒன்றை இன்று காலை சுற்றிவளைத்த பொலிஸார் 29 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்து நேற்று (15) இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாகவும், நள்ளிரவில் கூட அதிக சத்தங்களை எழுப்புவதாகவும்,
அப்பகுதி வாசிகளை துன்புறுத்துவதாகவும் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு தகவல் அளித்தனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அங்கிருந்த மூன்று பேர் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் குழு 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் - 29 இளைஞர்கள் கைது கம்பஹா - பியகம பகுதியில் உள்ள ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்துக்கு முகநூல் மூலம் ஒன்றுகூடிய இளைஞர்கள் குழு ஒன்றை இன்று காலை சுற்றிவளைத்த பொலிஸார் 29 பேரை கைது செய்துள்ளனர்.குறித்த விருந்து நேற்று (15) இரவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விருந்து நடைபெறுவதாகவும், நள்ளிரவில் கூட அதிக சத்தங்களை எழுப்புவதாகவும், அப்பகுதி வாசிகளை துன்புறுத்துவதாகவும் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு தகவல் அளித்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த மூன்று பேர் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள் குழு 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.