• May 19 2024

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை தட்டி சென்ற 3 தமிழர்கள்! samugammedia

Chithra / Apr 20th 2023, 2:46 pm
image

Advertisement

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது  அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய மூவருக்குமே இவ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த 3 பேருக்கும் அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அத்துடன், டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் இடம்பெற்ற நிகழ்வில்  அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி 3 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.

இவ்வாறாக அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற சாதனையாளர்கள்  மூவரிற்கும்   தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை தட்டி சென்ற 3 தமிழர்கள் samugammedia அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது  அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய மூவருக்குமே இவ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த 3 பேருக்கும் அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.அத்துடன், டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் இடம்பெற்ற நிகழ்வில்  அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி 3 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.இவ்வாறாக அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற சாதனையாளர்கள்  மூவரிற்கும்   தமிழ்நாடு அரசு சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement