• May 19 2024

"பாம்பை" சாக்லேட் போல மென்று துப்பிய 3 வயது குழந்தை- அதிர்ச்சியின் உச்சத்தில் தாய் ! samugammedia

Tamil nila / Jun 6th 2023, 8:11 am
image

Advertisement

பாம்பை பார்த்தால் அச்சப்படாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், இங்கே சிறுவன் ஒருவன் பாம்பையே சாக்லேட் போல மென்று தின்றுள்ளார்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் பாம்பை சொக்லேட் போல் கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் தினேஷ் குமார் என்பவரது, மூன்று வயது மகன் அக்‌ஷய் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் இருந்து ஒரு சிறிய பாம்பு வெளிப்பட்டு அவர் முன் வந்தது.

இதையடுத்து அக்‌ஷய் பாம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றார். அதன் பிறகு, அவர் கத்த ஆரம்பித்தார்.

அவர் மென்ற பாம்பு இறந்து சின்னாபின்னமானது.  அது என்ன பாம்பு என்று தெரியவில்லை.

அக்ஷய் வாயில் பாம்பு சிக்கியதைக் கண்டு குழந்தையின் பாட்டி பதறிப் போனார். உடனடியாக குழந்தையின் வாயிலிருந்து பாம்பை வெளியே எடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண்ணும், அவரது உறவினர்களும் குழந்தையை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளித்த பின், மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.  

"பாம்பை" சாக்லேட் போல மென்று துப்பிய 3 வயது குழந்தை- அதிர்ச்சியின் உச்சத்தில் தாய் samugammedia பாம்பை பார்த்தால் அச்சப்படாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், இங்கே சிறுவன் ஒருவன் பாம்பையே சாக்லேட் போல மென்று தின்றுள்ளார்இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுவன் பாம்பை சொக்லேட் போல் கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசத்தில் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் தினேஷ் குமார் என்பவரது, மூன்று வயது மகன் அக்‌ஷய் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் இருந்து ஒரு சிறிய பாம்பு வெளிப்பட்டு அவர் முன் வந்தது.இதையடுத்து அக்‌ஷய் பாம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றார். அதன் பிறகு, அவர் கத்த ஆரம்பித்தார்.அவர் மென்ற பாம்பு இறந்து சின்னாபின்னமானது.  அது என்ன பாம்பு என்று தெரியவில்லை.அக்ஷய் வாயில் பாம்பு சிக்கியதைக் கண்டு குழந்தையின் பாட்டி பதறிப் போனார். உடனடியாக குழந்தையின் வாயிலிருந்து பாம்பை வெளியே எடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண்ணும், அவரது உறவினர்களும் குழந்தையை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளித்த பின், மருத்துவர்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement