• Nov 10 2024

வெளிநாடு சென்ற 700 வேட்பாளர்கள்; 20 பேர் உயிருடன் இல்லை! தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய சிக்கல்

Chithra / Aug 27th 2024, 12:17 pm
image

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இது தவிர, பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட ஐநூறு வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் வினவியபோது, 

​​உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் அவ்வாறான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மாவட்டச் செயலகங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமைகள் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டன, அதில் 80,672 வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

வெளிநாடு சென்ற 700 வேட்பாளர்கள்; 20 பேர் உயிருடன் இல்லை தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய சிக்கல் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கபடுகிறது.இது தவிர, பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட ஐநூறு வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் வினவியபோது, ​​உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை கண்டறியும் விசேட நடவடிக்கை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், வேட்பாளர்கள் தொடர்பில் அவ்வாறான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு மாவட்டச் செயலகங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறலாம் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.இந்த நிலைமைகள் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டன, அதில் 80,672 வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement