• May 17 2024

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக 30, 31 ஆம் திகதி பிரகடனம்!

Chithra / Dec 28th 2022, 2:45 pm
image

Advertisement

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்கு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனவரியில் நாடு முழுவதும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்வதாக அமைச்சு கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக 30, 31 ஆம் திகதி பிரகடனம் இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார்.2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்கு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனவரியில் நாடு முழுவதும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்வதாக அமைச்சு கூறியுள்ளது.2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பு பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement