• Apr 26 2024

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 38 அடி நீளமான சுறா!

Chithra / Jan 30th 2023, 6:45 pm
image

Advertisement

புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கடற்கரையோரத்தில் பாரிய புள்ளி சுறாவொன்று இன்று (30) மாலை கரையொதுங்கியுள்ளது.


நாவற்காடு பிரதேசத்தில் மீனவர்கள் இன்று கரை வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கரை வலையை இழுத்த போதே குறித்த புள்ளி சுறா வலைக்குள் இருப்பதனை அவதானித்துள்ளனர்.


சுமார் 38 அடி நீளமான சுறா மீன் ஒன்றே இவ்வாறு கரைவலையில் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


இதனையடுத்து,  உடனடியாக செயற்பட்ட மீனவர்கள், குறித்த வலைகளை அப்புறப்படுத்தி சுறாவை மீண்டும் கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.


ஆனால் பல மணிநேரம் முயற்சி செய்த போதிலும் சுறாவை கடவில் அனுப்ப முடியாத நிலையில், இதுபற்றி கடற்படையினருக்கும், பொலிஸாருக்கும், வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.


இதன்போது, கடற்படையினரின்  இயந்திரப் படகின் உதவியுடன் மீனவர்களினதும் அப்பகுதி பொது மக்களினதும் பல மணி நேரப் போராடத்திற்கு பின் குறித்த சுறா நடுக்கடலில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 38 அடி நீளமான சுறா புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கடற்கரையோரத்தில் பாரிய புள்ளி சுறாவொன்று இன்று (30) மாலை கரையொதுங்கியுள்ளது.நாவற்காடு பிரதேசத்தில் மீனவர்கள் இன்று கரை வலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கரை வலையை இழுத்த போதே குறித்த புள்ளி சுறா வலைக்குள் இருப்பதனை அவதானித்துள்ளனர்.சுமார் 38 அடி நீளமான சுறா மீன் ஒன்றே இவ்வாறு கரைவலையில் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து,  உடனடியாக செயற்பட்ட மீனவர்கள், குறித்த வலைகளை அப்புறப்படுத்தி சுறாவை மீண்டும் கடலில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் பல மணிநேரம் முயற்சி செய்த போதிலும் சுறாவை கடவில் அனுப்ப முடியாத நிலையில், இதுபற்றி கடற்படையினருக்கும், பொலிஸாருக்கும், வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.இதன்போது, கடற்படையினரின்  இயந்திரப் படகின் உதவியுடன் மீனவர்களினதும் அப்பகுதி பொது மக்களினதும் பல மணி நேரப் போராடத்திற்கு பின் குறித்த சுறா நடுக்கடலில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement