• May 02 2024

வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களுக்கு விடுதலை..! samugammedia

Chithra / Nov 9th 2023, 3:07 pm
image

Advertisement

 

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும்  மன்னார் நீதிமன்றத்தினால் இன்று (9)  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன் 15 இந்திய மீனவர்களும், கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் இன்று (9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்  குறித்த 38 இந்திய மீனவர்களும்  மன்னார் நீதிமன்றத்தில்  மன்னார் நீதவான்  முன்னிலையில்

ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது. 

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி  கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் உடமையில் இருந்த சில சான்றுப் பொருட்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.


வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களுக்கு விடுதலை. samugammedia  தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும்  மன்னார் நீதிமன்றத்தினால் இன்று (9)  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன் 15 இந்திய மீனவர்களும், கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.குறித்த மீனவர்கள் இன்று (9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்  குறித்த 38 இந்திய மீனவர்களும்  மன்னார் நீதிமன்றத்தில்  மன்னார் நீதவான்  முன்னிலையில்ஆஜர் படுத்தப்பட்டனர்.இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி  கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் உடமையில் இருந்த சில சான்றுப் பொருட்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement