• Sep 19 2024

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாயமான பெறுமதியான 39 ஓவியங்கள்!

Chithra / Jan 1st 2023, 12:57 pm
image

Advertisement

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.


தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாதுகாப்பு) திருமதி கீதானி குருப்புஆராச்சியி இது குறித்து தெரிவிக்கையில், 

​​ஓவியங்களின் சிதைவு நிலைமைகளை ஆராய்ந்து, பாதுகாப்பு தொடர்பான பூர்வாங்க சிபாரிசு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


ஜனாதிபதி மாளிகையில் இருந்து மாயமான பெறுமதியான 39 ஓவியங்கள் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாதுகாப்பு) திருமதி கீதானி குருப்புஆராச்சியி இது குறித்து தெரிவிக்கையில், ​​ஓவியங்களின் சிதைவு நிலைமைகளை ஆராய்ந்து, பாதுகாப்பு தொடர்பான பூர்வாங்க சிபாரிசு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement