• May 17 2024

சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபரீதம் - புத்தாண்டு தினத்தில் 11 பேருக்கு ஏற்பட்ட நிலை

Chithra / Jan 1st 2023, 12:37 pm
image

Advertisement

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபரீதம் - புத்தாண்டு தினத்தில் 11 பேருக்கு ஏற்பட்ட நிலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.மேலும் குறித்த பேரூந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement