• Apr 03 2025

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை - மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்

Chithra / Apr 2nd 2025, 10:23 am
image


பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி இராமேஸ்வரம் செல்ல உள்ளார். 

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூன்று நாள்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில்   இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி  மீனவர்களை விடுதலை செய்ய   இலங்கை  அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை - மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி இராமேஸ்வரம் செல்ல உள்ளார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூன்று நாள்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில்   இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி  மீனவர்களை விடுதலை செய்ய   இலங்கை  அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement