• May 19 2024

நயினாதீவு பெருந்திருவிழாவிற்கு 40 படகுகள் சேவையில்...! வெளியான அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 10:08 am
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும்  இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

நாகபூசணி அம்மன் ஆலய பெருந்திருவிழாவிற்கு பயணிகள் பயணிப்பதற்கு ஏற்புடைய படகுகளிற்கான அனுமதிப்பத்திரம் கப்பற்றுறை வணிக அமைச்சின் செயலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் கச்சத்தீவு பெருநாளையொட்டி 21 படகுகள் பயணிகள் பயணத்திற்கு ஏற்புடையது என்று அனுமதிக்கப்பட்டிருந்தது.

நயினாதீவு திருவிழாவிற்கு இம்முறை மேலதிகமாக 21 படகுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 19 படக்குகளிற்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் இரு படகுகளிற்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட  வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் எதிர்வரும் உற்சவகாலத்தில் 40 படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்

நயினாதீவு பெருந்திருவிழாவிற்கு 40 படகுகள் சேவையில். வெளியான அறிவிப்பு.samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்  இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், நாகபூசணி அம்மன் ஆலய பெருந்திருவிழாவிற்கு பயணிகள் பயணிப்பதற்கு ஏற்புடைய படகுகளிற்கான அனுமதிப்பத்திரம் கப்பற்றுறை வணிக அமைச்சின் செயலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கச்சத்தீவு பெருநாளையொட்டி 21 படகுகள் பயணிகள் பயணத்திற்கு ஏற்புடையது என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. நயினாதீவு திருவிழாவிற்கு இம்முறை மேலதிகமாக 21 படகுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 19 படக்குகளிற்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இரு படகுகளிற்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட  வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் எதிர்வரும் உற்சவகாலத்தில் 40 படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement