• Jun 26 2024

வாழைச்சேனை சுகாதார பிரிவில் 41 டெங்கு நோயாளர்கள் அடையாளம்..!!

Tamil nila / Feb 15th 2024, 7:25 pm
image

Advertisement

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 15ம் திகதி வரை 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி  தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.


அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப்சஞ்ஜீவ் வழிகாட்டலில் இன்று வாழைச்சேனை  கிராம சேவகர் பிரிவில்  பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கள உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு வீடுகள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடத்தின்  மாத்திரம் 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வாழைச்சேனையில் 23 பேர், கறுவாக்கேணியில் 12 பேர், கல்குடாவில் 06 பேராக 41 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று வாழைச்சேனை  கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டதாகவும் பற்றைக்காடாக காணப்பட்ட காணிகளை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாகவும், வாழைச்சேனையில் அதிக டெங்கு தாக்கம் காணப்பட்டதால் விழிப்புணர்வு நடவடிக்கை தினமும் இடம்பெற்று வருவதாகவும், பாடசாலை மற்றும் மதஸ்தலங்களை அடிக்கடி துப்பரவு செய்யுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை சுகாதார பிரிவில் 41 டெங்கு நோயாளர்கள் அடையாளம். வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 15ம் திகதி வரை 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி  தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப்சஞ்ஜீவ் வழிகாட்டலில் இன்று வாழைச்சேனை  கிராம சேவகர் பிரிவில்  பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கள உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டு வீடுகள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடத்தின்  மாத்திரம் 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வாழைச்சேனையில் 23 பேர், கறுவாக்கேணியில் 12 பேர், கல்குடாவில் 06 பேராக 41 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.இன்று வாழைச்சேனை  கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டதாகவும் பற்றைக்காடாக காணப்பட்ட காணிகளை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாகவும், வாழைச்சேனையில் அதிக டெங்கு தாக்கம் காணப்பட்டதால் விழிப்புணர்வு நடவடிக்கை தினமும் இடம்பெற்று வருவதாகவும், பாடசாலை மற்றும் மதஸ்தலங்களை அடிக்கடி துப்பரவு செய்யுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement