• May 17 2024

அதிபர் சேவை தரம் III இற்கு வடமேல் மாகாணத்தில் 438 பேர் தெரிவு...!samugammedia

Sharmi / Oct 28th 2023, 8:30 pm
image

Advertisement

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் வடமேல் மாகாணத்தில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 438 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெயர் பட்டியலில் தமிழ் மொழியில் 53 பேரும், சிங்கள மொழியில் 385 பேரும் புதிய அதிபர்களாக நியமனம் பெறவுள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழியில் புதிய அதிபர்களாக நியமனம் பெறவுள்ளவர்களில் 17 பேர் பெண்களும்,  36 பேர் ஆண்களும் அடங்குகின்றனர்.

மேலும், புத்தளம் கல்வி வலயத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 44 பேர் புதிய அதிபர்களாக நியமனம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

இவ்வாறு புதிதாக நியமனம் பெறவுள்ள அதிபர்களுக்கு அடுத்த மீது முதல் வாரத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, பின் ஒரு மாத காலம் விஷேட பயிற்சிகளும் வழங்கப்பட்டவுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு புதியவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வு மற்றும் போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் சேவை தரம் III இற்கு வடமேல் மாகாணத்தில் 438 பேர் தெரிவு.samugammedia கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் வடமேல் மாகாணத்தில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 438 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த பெயர் பட்டியலில் தமிழ் மொழியில் 53 பேரும், சிங்கள மொழியில் 385 பேரும் புதிய அதிபர்களாக நியமனம் பெறவுள்ளனர்.வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழியில் புதிய அதிபர்களாக நியமனம் பெறவுள்ளவர்களில் 17 பேர் பெண்களும்,  36 பேர் ஆண்களும் அடங்குகின்றனர்.மேலும், புத்தளம் கல்வி வலயத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் 44 பேர் புதிய அதிபர்களாக நியமனம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர்.இவ்வாறு புதிதாக நியமனம் பெறவுள்ள அதிபர்களுக்கு அடுத்த மீது முதல் வாரத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, பின் ஒரு மாத காலம் விஷேட பயிற்சிகளும் வழங்கப்பட்டவுள்ளன.கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு புதியவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வு மற்றும் போட்டிப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement