திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நேற்றையதினம்(20) அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்கிரமவிடம் ஒப்படைத்தனர்.
ஜனநாயக தேசிய கூட்டணி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி,பொதுஜன பெரமுன, ஈ.பி.டி.பி ஆகிய பிரதான கட்சிகள் உட்பட சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலும், அக்கரைப்பற்று மாநகர சபையிலும் போட்டியிடுவதற்கான மனுக்களை தாக்கல் செய்தது.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில்,
"இம்முறை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எல்லா சபைகளினதும் அதிகாரங்களையும் எமது கட்சி வெற்றி கொள்ளும் என்றார்".
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐ.எல்.எம்.மாஹிர் கருத்து தெரிவிக்கையில்,
"இன்றைய சூழலில் எமது கட்சி எல்லா சபைகளினதும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் என்றார்".
ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி கருத்து தெரிவிக்கையில்,
"இன்றைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை". என கருத்துத் தெரிவித்தார்.
இதில் இளைஞர்களுக்குகட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது.எமது கட்சியின் வரலாற்றில் இதுவே நாவிதன்வெளி பிரதேச சபையில் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பமாகும்.என கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை நிந்தவூர் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) சார்பில் போட்டியிடும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம வேட்பாளராக சட்டத்தரணி இர்பான் தலைமையில் வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தேர்தல், மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, நாமல் ஓயா, மஹா ஓயா, பதியத்தலாவ, காரைதீவு, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு, லகுகல, நாவிதன்வெளி, தெஹியத்தகண்டி ஆகிய 19 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை அதிகமான சுயேச்சைக்குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளன. இதில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள நாபீர் பவுண்டேஷன் சுயேட்சைக் குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையினால் கைப்பற்றுவதற்கான மக்களின் பெரும் ஆதரவு பாரியளவு இருப்பதை அவதானிக்க முடிகிறமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தேர்தல் தொகுதிகளிலும் 19 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 44 வேட்புமனுக்கள் தாக்கல். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நேற்றையதினம்(20) அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்கிரமவிடம் ஒப்படைத்தனர்.ஜனநாயக தேசிய கூட்டணி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி,பொதுஜன பெரமுன, ஈ.பி.டி.பி ஆகிய பிரதான கட்சிகள் உட்பட சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலும், அக்கரைப்பற்று மாநகர சபையிலும் போட்டியிடுவதற்கான மனுக்களை தாக்கல் செய்தது.முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், "இம்முறை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எல்லா சபைகளினதும் அதிகாரங்களையும் எமது கட்சி வெற்றி கொள்ளும் என்றார்".அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐ.எல்.எம்.மாஹிர் கருத்து தெரிவிக்கையில், "இன்றைய சூழலில் எமது கட்சி எல்லா சபைகளினதும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் என்றார்".ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி கருத்து தெரிவிக்கையில், "இன்றைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை". என கருத்துத் தெரிவித்தார்.ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான வேட்பு மணு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதில் இளைஞர்களுக்குகட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது.எமது கட்சியின் வரலாற்றில் இதுவே நாவிதன்வெளி பிரதேச சபையில் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பமாகும்.என கருத்துத் தெரிவித்தார்.இதேவேளை நிந்தவூர் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) சார்பில் போட்டியிடும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம வேட்பாளராக சட்டத்தரணி இர்பான் தலைமையில் வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டது.இந்த தேர்தல், மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், தமண, உகன, நாமல் ஓயா, மஹா ஓயா, பதியத்தலாவ, காரைதீவு, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு, லகுகல, நாவிதன்வெளி, தெஹியத்தகண்டி ஆகிய 19 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்முறை அதிகமான சுயேச்சைக்குழுக்கள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளன. இதில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள நாபீர் பவுண்டேஷன் சுயேட்சைக் குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையினால் கைப்பற்றுவதற்கான மக்களின் பெரும் ஆதரவு பாரியளவு இருப்பதை அவதானிக்க முடிகிறமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தேர்தல் தொகுதிகளிலும் 19 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.