• Jul 01 2025

4,481 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் - 143 பேர் மீது சட்ட நடவடிக்கை

Chithra / Jul 1st 2025, 8:19 am
image

 

நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று 143 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று மாத்திரம் மொத்தம் 22,318 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

அவற்றில் 4,481 இடங்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டமே, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்தின் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது


4,481 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம் - 143 பேர் மீது சட்ட நடவடிக்கை  நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று 143 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் மொத்தம் 22,318 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 4,481 இடங்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டமே, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்தின் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement