• Nov 28 2024

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு..!

Sharmi / Nov 26th 2024, 7:02 pm
image

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427  குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த  ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம்  5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்பு. வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 ஆயிரத்து 427  குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 436 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்களைச் சேர்ந்த  ஆயிரத்து 861 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளதுடன் 56 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில்  135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 910 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 547 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அதேநேரம்  5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 87 குடும்பங்களைச் சேர்ந்த 324 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement