• May 03 2024

மருந்து ஒவ்வாமையால் 5 பேர் உயிரிழப்பு? சந்தேகம் வெளியிட்ட நிபுணர் மருத்துவக் குழு samugammedia

Chithra / Aug 9th 2023, 2:45 pm
image

Advertisement

அண்மைக் காலத்தில் வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 மரணங்களில் ஐந்து மரணங்களுக்கு மருந்து ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நிபுணர் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான அவர்களின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவ மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.நிபுணர் அறிக்கை 12 பரிந்துரைகளை வழங்கியது.

உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமைகளை நிர்வகிப்பதற்கான சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அது தொடர்பான பொறிமுறையை தயாரித்தல், உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் பதிவாகும் சந்தர்ப்பங்களில் முறையான மருத்துவ தணிக்கை நடத்துதல், மருந்துகள் பதிவின் போது சீரற்ற பரிசோதனைகள் மூலம் நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரத்தை பேணுதல் போன்றவை பரிந்துரைகளில் அடங்கும்.

குழுவின் கவனம் செலுத்தப்பட்ட 06 இறப்புகளில் ஐந்து பேர் மருந்து ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டவை என்று சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை முடிவு செய்துள்ளது.

ஒவ்வாமையை உண்டாக்கும் மருந்துகள் தொடர்பான தரப் பரிசோதனை அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


மருந்து ஒவ்வாமையால் 5 பேர் உயிரிழப்பு சந்தேகம் வெளியிட்ட நிபுணர் மருத்துவக் குழு samugammedia அண்மைக் காலத்தில் வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 மரணங்களில் ஐந்து மரணங்களுக்கு மருந்து ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நிபுணர் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பான அவர்களின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், மருத்துவ மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து ஆராய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.அதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.நிபுணர் அறிக்கை 12 பரிந்துரைகளை வழங்கியது.உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமைகளை நிர்வகிப்பதற்கான சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அது தொடர்பான பொறிமுறையை தயாரித்தல், உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் பதிவாகும் சந்தர்ப்பங்களில் முறையான மருத்துவ தணிக்கை நடத்துதல், மருந்துகள் பதிவின் போது சீரற்ற பரிசோதனைகள் மூலம் நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரத்தை பேணுதல் போன்றவை பரிந்துரைகளில் அடங்கும்.குழுவின் கவனம் செலுத்தப்பட்ட 06 இறப்புகளில் ஐந்து பேர் மருந்து ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டவை என்று சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை முடிவு செய்துள்ளது.ஒவ்வாமையை உண்டாக்கும் மருந்துகள் தொடர்பான தரப் பரிசோதனை அறிக்கைகள் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement