• Nov 14 2024

கிளிமஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறிச் சாதனை படைத்த சிறுவன்- குவியும் பாராட்டுகள்!

Tamil nila / Aug 26th 2024, 9:17 pm
image

தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம் ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.

 ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். 

 கடந்த 18ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்த டெக்பீர் சிங், 23ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார். 

 டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். 

 தனது மகனின் இந்த சாதனை குறித்து கருத்து வெளியிட்ட அவர், "டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். 

 அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிமஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறிச் சாதனை படைத்த சிறுவன்- குவியும் பாராட்டுகள் தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம் ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும். ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.  கடந்த 18ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்த டெக்பீர் சிங், 23ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.  டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.  தனது மகனின் இந்த சாதனை குறித்து கருத்து வெளியிட்ட அவர், "டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார்.  அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement