தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், J/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. J/403 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடை மழையால் யாழில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், J/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. J/403 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 29பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.