வலிகாமம் வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் வழிபாட்டுக்கு செல்ல இன்று(20) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (20) முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி வடக்கில் 34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி. வலிகாமம் வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் வழிபாட்டுக்கு செல்ல இன்று(20) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இன்று (20) முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.