• Nov 20 2024

மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு; நீதி கோரிய போராட்டத்தில் பதற்றம்..!

Sharmi / Nov 20th 2024, 7:17 pm
image

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது

தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது

போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இந்நிலையில், போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு; நீதி கோரிய போராட்டத்தில் பதற்றம். மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதுதாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றதுபோராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டதுஇதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.இந்நிலையில், போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement