• Nov 22 2025

50–100 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக அச்சம் நைஜீரியாவில் மீண்டும் அச்சுறுத்தல்

dorin / Nov 22nd 2025, 7:54 pm
image

வடக்கு நைஜீரியாவில் பாதுகாப்பு சூழல் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 50 முதல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயுத மேந்திய துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் நடைபெறும் நேரத்தில் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம், கல்வி நிறுவனங்களை குறி வைத்து கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்களை நினைவூட்டுகிறது. 

குறித்த கொள்ளையிடும் கும்பல் பள்ளிகளை அடிக்கடி இலக்காக வைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும்  பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த புதிய தாக்குதலைக் உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டித்து வருகின்றனர். 

இது அந்தப் பகுதியில் கல்வி பெறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நைஜீரியா அரசு இதுவரை சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிடவில்லை.

ஆனால், முந்தைய சம்பவங்களை போல, கடத்தப்பட்டவர்களை மீட்க சிறப்பு படையணிகளை அனுப்பும் வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம், வடக்கு நைஜீரியாவில் தொடர்ச்சியாக நடைபெறும் கொள்ளையர் வன்முறை, பாதுகாப்பின் குறைபாடு மற்றும் கல்விக்கான அச்சுறுத்தல் பற்றிய சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

50–100 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக அச்சம் நைஜீரியாவில் மீண்டும் அச்சுறுத்தல் வடக்கு நைஜீரியாவில் பாதுகாப்பு சூழல் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 50 முதல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயுத மேந்திய துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெறும் நேரத்தில் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.இந்த சம்பவம், கல்வி நிறுவனங்களை குறி வைத்து கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்களை நினைவூட்டுகிறது. குறித்த கொள்ளையிடும் கும்பல் பள்ளிகளை அடிக்கடி இலக்காக வைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும்  பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த புதிய தாக்குதலைக் உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டித்து வருகின்றனர். இது அந்தப் பகுதியில் கல்வி பெறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.நைஜீரியா அரசு இதுவரை சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிடவில்லை.ஆனால், முந்தைய சம்பவங்களை போல, கடத்தப்பட்டவர்களை மீட்க சிறப்பு படையணிகளை அனுப்பும் வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.இந்தச் சம்பவம், வடக்கு நைஜீரியாவில் தொடர்ச்சியாக நடைபெறும் கொள்ளையர் வன்முறை, பாதுகாப்பின் குறைபாடு மற்றும் கல்விக்கான அச்சுறுத்தல் பற்றிய சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement