• Oct 25 2024

புத்தளம் மாவட்டத்தில் 5403 பேர் பாதிப்பு..!

Sharmi / Oct 24th 2024, 4:46 pm
image

Advertisement

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (23) முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 1510 குடும்பங்களைச் சேர்ந்த 5403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 10 கிராம சேவகர் பிரிவுகளில் 494 குடும்பங்களை சேர்ந்த 2005 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாத்தாண்டிய  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 477 பேரும், வென்னப்புவ  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மஹாவெவ  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 425 பேரும், கற்பிட்டி  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 563 குடும்பங்களைச் சேர்ந்த 1920 பேரும், புத்தளம்  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேரும், மாதம்பை  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராம சேவகர் பிரிவுகளில் 1 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் 9 வீடுகளும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவில்  ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 5403 பேர் பாதிப்பு. புத்தளம் மாவட்டத்தில் நேற்று (23) முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 1510 குடும்பங்களைச் சேர்ந்த 5403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.புத்தளம் மாவட்டத்தில் உள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 10 கிராம சேவகர் பிரிவுகளில் 494 குடும்பங்களை சேர்ந்த 2005 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், நாத்தாண்டிய  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 477 பேரும், வென்னப்புவ  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மஹாவெவ  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 425 பேரும், கற்பிட்டி  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 563 குடும்பங்களைச் சேர்ந்த 1920 பேரும், புத்தளம்  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேரும், மாதம்பை  பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராம சேவகர் பிரிவுகளில் 1 குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் 9 வீடுகளும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவில்  ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement