• Dec 05 2024

திருகோணமலையில் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட 60 வயது பெண்

Chithra / Dec 3rd 2024, 12:46 pm
image


திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மூதூர் - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி என்ற 60 வயதுடைய பெண்ணுக்கே  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனபடிப்படையில்,   நாளை தன்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருகோணமலையில் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட 60 வயது பெண் திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.மூதூர் - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி என்ற 60 வயதுடைய பெண்ணுக்கே  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனபடிப்படையில்,   நாளை தன்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement