• May 02 2024

75வது சுதந்திரதினம் - சிங்களவர்களுக்கும் கரிநாளே.! மீண்டெழ முடியாத படுகுழிக்குள் இலங்கை.!

Sharmi / Feb 1st 2023, 3:02 pm
image

Advertisement

உணவின்றித் தவித்துக்கொண்டிருக்கும் சிங்கள மக்களை பற்றி சிந்திக்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருமெடுப்பில் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருவதாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இலங்கையின் சுதந்திர தினம் என்பது சிங்கள தேசத்திற்கும் ஒரு கரிநாளாகவே பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது சமூகத்தின் செய்தி பிரிவிற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழர் தேசத்தை ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் வலுக்கட்டாயமாக முடக்கி வைத்திருக்கும் அரசியலமைப்பில் இந்நாளைச் சுதந்திர நாளாகத் தமிழர்களால் ஒருபோதும் கொண்டாட இயலாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள தன்சானியா நாடு அண்மையில் தனது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்துள்ளது.
அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தங்கும் இல்லங்களை அமைப்பதற்குப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், தன்சானியாவைவிட மிகவும் மோசமான பொருளாதாரச் சீரழிவுக்குள் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் இலங்கையில் உணவின்றித் தவிக்கும் தன் சிங்களதேசத்தைப் பற்றியேனும் சிந்திப்பவராக ஜனாதிபதி இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவின் பொருளாதாரம் இன்று மீண்டெழ முடியாத படுகுழிக்குள் வீழ்ந்து கிடப்பதற்குத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்தின் மீது தொடுத்து வந்த யுத்தமே பிரதான காரணம்.

இதற்கு வித்திட்டது பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுகின்ற இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு முறைமையே என்றும் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

75வது சுதந்திரதினம் - சிங்களவர்களுக்கும் கரிநாளே. மீண்டெழ முடியாத படுகுழிக்குள் இலங்கை. உணவின்றித் தவித்துக்கொண்டிருக்கும் சிங்கள மக்களை பற்றி சிந்திக்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருமெடுப்பில் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருவதாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே இலங்கையின் சுதந்திர தினம் என்பது சிங்கள தேசத்திற்கும் ஒரு கரிநாளாகவே பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எமது சமூகத்தின் செய்தி பிரிவிற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழர் தேசத்தை ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் வலுக்கட்டாயமாக முடக்கி வைத்திருக்கும் அரசியலமைப்பில் இந்நாளைச் சுதந்திர நாளாகத் தமிழர்களால் ஒருபோதும் கொண்டாட இயலாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள தன்சானியா நாடு அண்மையில் தனது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை இரத்துச் செய்துள்ளது.அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தங்கும் இல்லங்களை அமைப்பதற்குப் பயன்படுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தன்சானியாவைவிட மிகவும் மோசமான பொருளாதாரச் சீரழிவுக்குள் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் இலங்கையில் உணவின்றித் தவிக்கும் தன் சிங்களதேசத்தைப் பற்றியேனும் சிந்திப்பவராக ஜனாதிபதி இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இலங்கைத் தீவின் பொருளாதாரம் இன்று மீண்டெழ முடியாத படுகுழிக்குள் வீழ்ந்து கிடப்பதற்குத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்தின் மீது தொடுத்து வந்த யுத்தமே பிரதான காரணம். இதற்கு வித்திட்டது பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுகின்ற இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு முறைமையே என்றும் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement